சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கடலோர காவல்படை வீரர் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மசாஜ் சென்டரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கடலோர காவல் படை வீரர் மற்றும் பைனான்சியர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி, அண்ணா நகர் மசாஜ் சென்டரில், 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். மசாஜ் சென்டருக்கு வந்து சென்ற 40 பேர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. உருளையன்பேட்டை போலீசார் 40 பேரை அடை யாளம் கண்டு, 'போக்சோ' பிரிவின் கீழ்

புதுச்சேரி-மசாஜ் சென்டரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கடலோர காவல் படை வீரர் மற்றும் பைனான்சியர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி, அண்ணா நகர் மசாஜ் சென்டரில், 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். மசாஜ் சென்டருக்கு வந்து சென்ற 40 பேர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. உருளையன்பேட்டை போலீசார் 40 பேரை அடை யாளம் கண்டு, 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.சென்னை ராமாபுரம் விக்னேஷ், புதுச்சேரி கொட்டுப் பாளையம் அருண், திருவள்ளுவர் நகர் பூபதி, விழுப்புரம் தேவநாதன், கண்டரக்கோட்டை சீனுவாசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று மேலும் இருவர் கைது செய்யப்பட் டனர்.மதுராந்தகம், மொட்சேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகத் (எ) ஜெகத்ரட்சகன், 24; திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பெரியார் வீதியைச் சேர்ந்த பைனான்சியர் சீனு (எ) சீனிவாசன், 54; ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.இதில் ஜெகத்ரட்சகன், லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் தங்கி, புதுச்சேரி கடலோரக் காவல் படையில் பணியாற்றி வருகிறார்.இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X