பொது செய்தி

இந்தியா

தொலைதுாரக் கல்வியில் புதிய படிப்புகள் துவக்கம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி பல்கலை., தொலைதுாரக் கல்வி இயக்ககத்தில், புதிய படிப்புகள் துவங்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை துணைவேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்தார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதுார கல்வி இயக்ககத்தில், தற்போது ஐந்து எம்.பி.ஏ., படிப்புகள், 4 முதுநிலை படிப்புகள், இரண்டு இளங்கலை என 11 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்தாண்டு தொலைதுார

புதுச்சேரி-புதுச்சேரி பல்கலை., தொலைதுாரக் கல்வி இயக்ககத்தில், புதிய படிப்புகள் துவங்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை துணைவேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்தார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதுார கல்வி இயக்ககத்தில், தற்போது ஐந்து எம்.பி.ஏ., படிப்புகள், 4 முதுநிலை படிப்புகள், இரண்டு இளங்கலை என 11 படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்தாண்டு தொலைதுார கல்வி இயக்ககத்தில் கூடுதல் படிப்புகள் துவங்கப்பட்டு, இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனை துணைவேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்து பேசும்போது ',தொலைதுார கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதியை முதன்முதலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஏற்படுத்தி கொடுத்தது. தொலைதுார மாணவர்களுக்கான வேலை வாய்ப்புக்கான நேர்காணல் அடுத்த மாதம் ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.நிகழ்ச்சியில், பல்கலைக் கழக தொலைதுார கல்வி இயக்கக இயக்குனர் ராமய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொலைதுார கல்வி சேர்க்கைக்கு https://www.pondiuni.edu.in/admissions-2021-22/ என்ற இணையதள முகவரியை காணலாம்.இந்தாண்டு தொலைதுார கல்வியில், மார்க்கெட்டிங், பைனான்ஸ், மனிதவள மேம்பாடு, பன்னாட்டு வணிகம், பொது, சுற்றுலா, ஆபரேஷன் அண்ட் சப்ளை செயின் மேலாண்மை, ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன.மேலும், எம்.காம்., பைனான்ஸ், எம்.ஏ., ஆங்கிலம், இந்தி, சோஷியாலஜி ஆகிய முதுநிலை படிப்புகள் பி.பி.ஏ., பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சோஷியாலஜி, மாஸ் கம்யூனிகேஷன் ஆகிய இளநிலை படிப்புகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X