மழை நிவாரணமாக ரூ.15,000 வழங்க மா.கம்யூ., கோரிக்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மழை நிவாரணமாக ரூ.15,000 வழங்க மா.கம்யூ., கோரிக்கை

Added : நவ 23, 2021
Share
புதுச்சேரி-'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' என மா.கம்யூ., கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து மா.கம்யூ., பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை;புதுச்சேரியில் கடந்த பத்து நாட்களாக பெய்த கன மழை, வெள்ளம் காரணமாக பாகூர் கொம்யூனில், 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.நகரப்

புதுச்சேரி-'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' என மா.கம்யூ., கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து மா.கம்யூ., பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை;புதுச்சேரியில் கடந்த பத்து நாட்களாக பெய்த கன மழை, வெள்ளம் காரணமாக பாகூர் கொம்யூனில், 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.நகரப் பகுதியில் ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், கொம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.முகாமில் உள்ள பாதிக் கப்பட்ட மக்களுக்கு தேவையான பாய், போர்வை, குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. முகாமில் சுகாதார வசதி இல்லாததால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.மழை, வெள்ளத்தால் சேதமான வீட்டிற்கு ரூ.25,000, இடிந்து சேதமடைந்த வீட்டுக்கு மானியத்துடன் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.நீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000, மரவள்ளி, கரும்பு பயிர்களுக்கு ஏக்கருக்கு 60,000 ரூபாய் வழங்க வேண்டும்.தொடர் மழையால் வேலையின்றி வறுமையில் வாடும் அனைத்து குடும்பத்திற்கும் நிவாரணமாக 15,000 ரூபாய் வழங்க வேண்டும். வெள்ளத்தால் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X