மிதவை ஜெட்டி மாயம் படகு சவாரிக்கு சிக்கல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பேரடைஸ் பீச்சில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதவை ஜெட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதால், சுண்ணாம்பாறில் படகு சவாரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது.படகு குழாமில் இருந்து முகத்துவாரத்தில் உள்ள பாரடைஸ் பீச்சுக்கு படகு

புதுச்சேரி-பேரடைஸ் பீச்சில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதவை ஜெட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதால், சுண்ணாம்பாறில் படகு சவாரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது.படகு குழாமில் இருந்து முகத்துவாரத்தில் உள்ள பாரடைஸ் பீச்சுக்கு படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து, பொழுதை கழித்துவிட்டு திரும்புவர்.கனமழை காரணமாக, இங்கு கடந்த ஒரு வாரமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, சுண்ணாம்பாறு பேரடைஸ் பீச்சில் 20 மீட்டர் தொலைவிற்கு முகத்துவாரத்தில் கடும் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.பேரடைஸ் பீச்சில் நிறுவப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதவை ஜெட்டியை, கடந்த 19ம் தேதி நள்ளிரவு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. அதன் அடித்தள சாரம் மட்டுமே எஞ்சியுள்ளது இதனால் மழை ஓய்ந்தாலும், சுண்ணாம்பாற்றில் படகு சவாரி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காணாமல்போன மிதவை ஜெட்டியை, கடற்கரை கிராமங்களில் ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக தேடி வருகின்றனர்.இது குறித்து ஊழியர்கள் கூறும்போது, 'பேரடைஸ் பீச்சில் இருந்த மிதவை ஜெட்டி பாதுகாப்பாக தான் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. வீடூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், சங்கராபரணியாற்றில் கடந்த 19ம் தேதி நள்ளிரவு வெள்ளம் பெருக்கெடுத்ததில் மிதவை ஜெட்டி அடித்து செல்லப்பட்டுள்ளது.தற்காலிகமாக மரக்கட்டைகளால் மிதவை ஜெட்டி அமைத்தால் மட்டுமே படகு சவாரியை மீண்டும் துவங்க முடியும். பேரடைஸ் பீச்சில் இருந்த குடில்கள், உணவகங்களின் மேற்கூரைகளும் சேதமடைந்துவிட்டன. இதனையும் சரி செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X