பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் வரும் 27ம் தேதி மியாட் சிறப்பு மருத்துவர்கள் முகாம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மியாட் மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்கள், வரும் 27ம் தேதி புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.சென்னை மியாட் மருத்துவமனையின், இரைப்பை, குடல், எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும், துறையின் இயக்குனருமான பாஸ்கரன், மூத்த நரம்பியல் நிபுணர் சுப்ரமணியன் ஆகியோர், மருத்துவ ஆலோசனை வழங்க, வரும் 27ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர்.இந்த ஆலோசனை முகாம்,

புதுச்சேரி-மியாட் மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்கள், வரும் 27ம் தேதி புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.சென்னை மியாட் மருத்துவமனையின், இரைப்பை, குடல், எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும், துறையின் இயக்குனருமான பாஸ்கரன், மூத்த நரம்பியல் நிபுணர் சுப்ரமணியன் ஆகியோர், மருத்துவ ஆலோசனை வழங்க, வரும் 27ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர்.இந்த ஆலோசனை முகாம், எண்: 30/11, அம்பாள் நகர் மெயின்ரோடு குண்டுப்பாளையம் பேட்ரிக் பள்ளி அருகில், ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில் நடக்கிறது.மாலை 5.00 முதல், இரவு 9.00 மணி வரை ஆலோசனை பெறலாம்.தலைவலி, வாந்தி, வலிப்பு நோய், பார்கின்சன்ஸ், பக்கவாதம், பார்வை குறைபாடு, முகம், கழுத்து, முதுகு நரம்பு கோளாறுகள், காது கேளாமை, காதுகளில் சத்தம் வருதல், மூளை கட்டிகள், உடல் உறுப்புகளின் பலவீனம், மறதி நோய், முடக்கு வாதம், உடல் நடுக்கம், அசாதாரண இயக்கங்கள், குடும்ப வரலாற்றில் பக்கவாத நோய், அதிக கொழுப்பு சத்து, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.மேலும், வயிற்று வலி, வயிற்றில் கட்டி, செரிமான மண்டலத்தில் ரத்தப்போக்கு, நீண்ட நாட்களாக மலச்சிக்கல், குடல் நுண்ணுயிர் அழற்சி, பித்தப்பை கற்கள், குடலிறக்கம், வயிற்று புண், புற்றுநோய், உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல், மலக்குடல் பாதிப்பு, உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களும் ஆலோசனை பெற அணுகலாம்.முந்தைய மருத்துவ பதிவுகள் இருந்தால் அவசியம் கொண்டு வரவேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம்-200 ரூபாய். முன்பதிவுக்கு 9384083062, 98412-68500 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X