இந்தியா

ரூ.5,000மஞ்சள் ரேஷன்கார்டிற்கும் மழை நிவாரணம்...இடைக்கால நிவாரணம் ரூ.300 கோடி கேட்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
மத்திய குழுவை சந்தித்த பின் ரங்கசாமி அறிவிப்பு புதுச்சேரியில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் ராஜிவ்சர்மா தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். இவர்கள், நேற்று இரவு சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அப்போது, மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விபரங்களை முதல்வர் விளக்கி கூறினார்.அதன்பிறகு, முதல்வர் ரங்கசாமி
 ரூ.5,000மஞ்சள் ரேஷன்கார்டிற்கும் மழை நிவாரணம்...இடைக்கால நிவாரணம் ரூ.300 கோடி கேட்பு

மத்திய குழுவை சந்தித்த பின் ரங்கசாமி அறிவிப்பு புதுச்சேரியில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் ராஜிவ்சர்மா தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர்.

இவர்கள், நேற்று இரவு சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அப்போது, மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விபரங்களை முதல்வர் விளக்கி கூறினார்.அதன்பிறகு, முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கனமழை பெய்துள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 130 செ.மீ., மழை பெய்யும். ஆனால் இந்தாண்டு 180 செ.மீ.,க்கு மேலாக மழை பெய்துள்ளது.சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், மணவெளி, அரியாங்குப்பம் மற்றும் பாகூர் தொகுதிகளில் கரையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக பாகூர், சேலியமேடு உள்ளிட்ட சில கிராமங்கள் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி இருந்தன.வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் இருந்த மக்களை பாதுகாப்பாக மீட்டு, பள்ளி மற்றும் சமுதாய நலக் கூடங்களில் தங்க வைத்து, உணவு வழங்கப்பட்டது. ஏராளமானோர் வீடு மற்றும் கால்நடைகளை இழந்துள்ளனர்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 17 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்களில் இருந்த நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சேதமடைந்தள்ளன. சாலைகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன.தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் விவசாய தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் வேலையின்றி, அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசினை நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாக ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வந்துள்ளனர். இக்குழுவினர் இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில பகுதிகளை பார்வையிடுகின்றனர்.மழை சேதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். மாநிலத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.300 கேட்டுள்ளோம். மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.கடந்த மாத இறுதியில் பெய்த மழை சேதங்களை ஆய்வு செய்து, மத்திய குழுவிடம் கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் ஆய்வு செய்ய உள்ளனர்.இரண்டாம் முறையாக மீண்டும் மழை பெய்துள்ளது. எனவே முழுவதும் ஆய்வு செய்து, மீண்டும் நிவாரணம் கேட்போம்.கட்டடத் தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாய கூலி, தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மழை நிவாரணம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப் பட்டது.மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனையேற்று, மஞ்சள் ரேஷன் கார்டு தாரர்களுக்கும் மழை நிவாரணம் ரூ.5,000 வழங்கப்படும். சொன்னதை செய்து வருகிறோம். எனவே இதனையும் செய்வோம்.தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.கனமழையில் அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றனர். எதிர் வரும் மழையிலும் சிறப்பாக செயல்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X