திரைப்படங்கள், நாடகங்களில் பெண்கள் நடிக்க தலிபான்கள் தடை

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
காபூல் : ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்க தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். 'ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என, தலிபான் கூறி வந்தாலும், பல மாகாணங்களில் பள்ளிகளுக்கு மாணவியர் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது,
Taliban, ban, TV shows, women actors, female journalists.hijabs

காபூல் : ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்க தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். 'ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என, தலிபான் கூறி வந்தாலும், பல மாகாணங்களில் பள்ளிகளுக்கு மாணவியர் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது, பெண்களுக்கு எதிரான தலிபானின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில் இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் நடிக்கக்கூடாது. அதாவது திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் பெண் கலைஞர்கள் இருக்கக்கூடாது.


latest tamil news



அதேபோல் ஆண் நடிகர்களும் நிர்வாணமாக இருக்கும் வகையில் காட்சிகள் எடுக்கக்கூடாது. ஆண் கலைஞர்களின் மார்பு முதல் முழங்கால் வரை வெளியில் தெரியக்கூடாது. செய்தி சேனலில் வரும் பெண் பத்திரிகையாளர்கள் 'ஹிஜாப்' துணியால் தலைமுடி தெரியாத அளவிற்கு மூடிக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை ஊக்குவிக்கும் வகையிலான திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது.

இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் ஆப்கனின் மதிப்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
23-நவ-202116:31:20 IST Report Abuse
Anand அப்படியானால் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் இதுநாள்வரை திரைப்படங்கள், நாடகங்களில் பெண்கள் நடித்துக் கொண்டிருந்தார்களா?
Rate this:
Cancel
23-நவ-202115:55:47 IST Report Abuse
ஆரூர் ரங் அப்போ அங்கே ரெட் ஜெயன்ட் , சன் பிக்சர்ஸ்க்கு வாய்ப்பில்லையா🤔? என்ன நாடுடா அது?
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
23-நவ-202114:54:56 IST Report Abuse
தமிழன் அப்கானிஸ்தான்ல இருந்து நியூஸ் எல்லாம் வருதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X