புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, துறை செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார்.சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா மற்றும் அதிகாரிகள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் தகவல்கள் சரி பார்த்து, அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் இப்பணியில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தற்போதைய நிலவரப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மட்டுமே தொற்றுக்கு ஆளாகின்றனர். தொற்று பாதிப்பால் தீவிர சிகிச்சை பெறும் அனைவரும தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே. எனவே மக்கள் அச்ச மின்றி தடுப்பூசியை போட் டுக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கேட்டுக் கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE