மதுபான பாரில் ரகளை | Dinamalar

மதுபான பாரில் ரகளை

Added : நவ 23, 2021
Share
புதுச்சேரி-மதுபான பாரில் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, யூ டியூப் சேனல் உரிமையாளர் மகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதில், இருவர் கைது செய்யப்பட்டனர்.முத்தியால்பேட்டை வெள்ளவாரி வீதியைச் சேர்ந்தவர் ஜார்ஜஸ் சினாஸ், 32; இவர், முத்தியால்பேட்டை காந்தி வீதியில் ஏ.கே. டார்வின் ஓட்டலில், கேளிக்கை மதுபான பார் (பப்) நடத்தி வருகிறார்.தேனி மாவட்டம்

புதுச்சேரி-மதுபான பாரில் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த, யூ டியூப் சேனல் உரிமையாளர் மகன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதில், இருவர் கைது செய்யப்பட்டனர்.முத்தியால்பேட்டை வெள்ளவாரி வீதியைச் சேர்ந்தவர் ஜார்ஜஸ் சினாஸ், 32; இவர், முத்தியால்பேட்டை காந்தி வீதியில் ஏ.கே. டார்வின் ஓட்டலில், கேளிக்கை மதுபான பார் (பப்) நடத்தி வருகிறார்.தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். சமையல் தொடர்பாக 'யூ டியூப்' சேனல் நடத்தி வருகிறார். புதுச்சேரி காமராஜர் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார்.ஓட்டலை பார்க்க, ஆறுமுகம் மகன் கோபிநாத், நண்பர்கள் ஜெயராம், ராஜசுப்ரமணியபாண்டியன் உள்ளிட்டோர், நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தனர். பின்னர், ஜார்ஜஸ் சினாசின் மதுபான கேளிக்கை பாருக்கு சென்றனர்.மதுபான பார் இரவு 11:00 மணிக்கு மூடப்பட்டது. அதன்பிறகு, கோபிநாத், தனக்கு மதுபானம் வேண்டும் என கேட்டார். பார் ஊழியர்கள் தர மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத் தரப்பினர், பார் உரிமையாளர் ஜார்ஜஸ் சினாசை பீர் பாட்டிலால் தாக்கி, டேபிள்களை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.இது குறித்து ஜார்ஜஸ் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், பொள்ளாச்சி, சுலீஸ்வரன்பேட்டை, என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த ஜெயராம், 25; தேனி மாவட் டம், உத்தமபாளையம், சுருளிபேட்டை, வடக்கு வீதியைச் சேர்ந்த ராஜசுப்ரமணியபாண்டியன் (எ) தாமு, 32; கோபிநாத் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.ஜெயராம், தாமுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X