பொது செய்தி

இந்தியா

ரூ.400 கோடி நிவாரணம் வழங்க மத்திய குழுவிடம் அ.தி.மு.க., மனு

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''புதுச்சேரி மாநிலத்திற்கு மழை நிவாரணமாக 400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்'' என கிழக்கு அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் மத்திய குழுவினரிடம் அளித்துள்ள மனு:புதுச்சேரியில் கனமழை, வெள்ளத்தால் எண்ணற்ற குடிசைகள், கல்வீடுகள் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள், மின் வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில்

புதுச்சேரி-''புதுச்சேரி மாநிலத்திற்கு மழை நிவாரணமாக 400 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்'' என கிழக்கு அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் மத்திய குழுவினரிடம் அளித்துள்ள மனு:புதுச்சேரியில் கனமழை, வெள்ளத்தால் எண்ணற்ற குடிசைகள், கல்வீடுகள் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள், மின் வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் விவசாய பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய குழு அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு, நிவாரண உதவி தாராளமாக கிடைத்திட பரிந்துரைக்க வேண்டும்.மழையால் பாதித்த 1,80,000 சிவப்பு ரேஷன் கார்டு தாரர்களுக்கு, தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார் இதற்கு, அரசுக்கு ரூ.90 கோடி தேவைப்படுகிறது.மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து பிரிவினருக்கும் இந்த நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என அரசியல் கட்சியினர் கேட்டுள்ளனர்.இந்த இரு பிரிவு ரேஷன்கார்டுதாரர்கள் சேர்த்து மொத்தம் 3,50,000 குடும்பங்கள் உள்ளன. எனவே எவ்வித பாகுபாடின்றி உதவி வழங்க வேண்டும். இதற்கு 175 கோடி ரூபாய் தேவைப்படும்.புதுச்சேரி, காரைக்காலில் 300 கோடி ரூபாய் அளவிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணம் அளித்திட ரூ.100 கோடி தேவைப்படு கிறது. சேதமான சாலைகளை செப்பனிட்டு மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர மொத்தம் ரூபாய் 400 கோடி தேவைப்படுகிறது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X