கனமழை பெய்தும் வறண்ட நிலையில் உள்ளன. 30 கண்மாய்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை பெய்தும் வறண்ட நிலையில் உள்ளன. 30 கண்மாய்கள்

Added : நவ 23, 2021
Share
சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனத்தில் லெசிஸ், ஷீல்டு, 48 ம் மடை, கட்டாணிப்பட்டி 1,2 ஆகிய கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6748 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.பெரியாறு நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கீழப்பூங்குடி, பேரணிப்பட்டி, பிரவலுார், ஒக்கூர், ஒ.புதுார், கருங்காப்பட்டி, மேலமங்கலம்,
கனமழை பெய்தும் வறண்ட நிலையில் உள்ளன. 30 கண்மாய்கள்


சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனத்தில் லெசிஸ், ஷீல்டு, 48 ம் மடை, கட்டாணிப்பட்டி 1,2 ஆகிய கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6748 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

பெரியாறு நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கீழப்பூங்குடி, பேரணிப்பட்டி, பிரவலுார், ஒக்கூர், ஒ.புதுார், கருங்காப்பட்டி, மேலமங்கலம், குளக்கட்டப்பட்டி, இடையமேலுார், காஞ்சிரங்கால் உள்ளிட்ட 10 கிராமங்கள் விடுபட்டுள்ளன.

இப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. கனமழைபெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லை. இப்பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. பெரியாறு பாசனத்தில் இந்த 10 கிராமங்களை சேர்க்க வேண்டும், என கிராம மக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அதிகாரிகளை சந்தித்து பல முறை மனு கொடுத்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.சேதுராமன், பிரவலுார் விவசாயி: 1965 க்கு முன்பு வரை 10 கிராமங்களுக்கும் பெரியாறு பாசனக்கால்வாய் மூலம் பாசன நீர் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எங்கள் கண்மாய்கள் ஆயக்கப்பட்டு பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரியாறு பாசனக்கால்வாயால் பயன் பெற்று வந்த கண்மாய்கள் கனமழை பெய்தும் வறண்ட நிலையில் உள்ளன. 30 கண்மாய்கள் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் பாசனம் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள் தரிசாக மாறியுள்ளன. அரசு நடவடிக்கை எடுத்து பெரியாறு பாசனப்பகுதியில் எங்கள் கிராமங்களை மீண்டும் இணைத்து பாசன நீர் வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X