பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் அரசு சட்டக்கல்லூரி; முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
சிவகங்கை : திருப்புத்துாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அறிவித்தபடி சிவகங்கையில் அரசு சட்டக்கல்லுாரி துவக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பனுக்காக பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்டாயம்


சிவகங்கை : திருப்புத்துாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அறிவித்தபடி சிவகங்கையில் அரசு சட்டக்கல்லுாரி துவக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திருப்புத்துாரில் அமைச்சர் பெரியகருப்பனுக்காக பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் சிவகங்கையில் அரசு சட்டக்கல்லுாரி துவக்கப்படும் என உறுதி அளித்தார்.அதன்படி சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கீழ் 17 நீதிமன்றம், 350 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிபுரிகின்றனர்.

சிவகங்கையில் அரசு சட்டக்கல்லுாரி கொண்டு வருவது தான் பொருத்தமான விஷயம். ஆனால் 2021 ஆக.,ல் நடந்த சட்டசபை கூட்ட தொடரில் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, சிவகங்கை எம்.பி., கார்த்திக், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடியின் வேண்டுகோள் படி காரைக்குடியில் அரசு சட்டக்கல்லுாரி துவக்கப்படும் என அறிவித்தார்.இது சிவகங்கை மாவட்ட மக்களைபெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்அறிவித்தபடி காரைக்குடிக்கு செல்ல உள்ள சட்ட கல்லுாரியை ரத்து செய்து சிவகங்கை யில் துவக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் மூலம் முதல்வருக்கு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X