பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணை பகுதியில் படப்பிடிப்பால் சர்ச்சை

Added : நவ 23, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வைகை அணை பகுதியில் நடந்த சினிமா படப்பிடிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 69.42 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 2387 கனஅடியாகவும், நீர்திறப்பு 2355 கனஅடியாகவும் உள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வைகை அணை அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் நடிகர் கார்த்தி, இயக்குனர்
 வைகை அணை பகுதியில்  படப்பிடிப்பால் சர்ச்சை

தேனி : தேனி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வைகை அணை பகுதியில் நடந்த சினிமா படப்பிடிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 69.42 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து 2387 கனஅடியாகவும், நீர்திறப்பு 2355 கனஅடியாகவும் உள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வைகை அணை அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் நடிகர் கார்த்தி, இயக்குனர் சங்கர் மகள் அதிதீ நடிக்கும் விருமன் சினிமா படப்பிடிப்பு நடந்துள்ளது.

இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அணைப்பகுதியில் படப்பிடிப்பு நடந்ததை கண்டித்து நேற்று சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் முரளீதரனிடம் கேட்டபோது, ''எஸ்.டி.ஓ.விடம் விசாரித்தேன். கார் பார்க்கிங்கில் படப்பிடிப்பு குழுவினர் நின்றதாக தெரிவித்தார். படப்பிடிப்பு தொடர்பாக நான் அனுமதி எதுவும் கொடுக்கவில்லை'' என்றார்.

போலீஸ் தரப்பில் கேட்டபோதும், 'படப்பிடிப்பு தொடர்பாக யாரும் அனுமதி கேட்கவில்லை' என்றனர். இதனால் படப்பிடிப்புக்கு யார் அனுமதி கொடுத்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X