பொது செய்தி

தமிழ்நாடு

சி.ஐ.டி.யூ.,வினர் உண்ணாவிரதம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.பணிமனை முன் நடந்த போராட்டத்திற்கு, கிளைத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.துணைத் தலைவர்கள் தெய்வீகன், செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் தங்கபாண்டியன்,

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.பணிமனை முன் நடந்த போராட்டத்திற்கு, கிளைத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.துணைத் தலைவர்கள் தெய்வீகன், செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் தங்கபாண்டியன், முருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிர்வாகிகள் கங்காஜலம், கந்தசாமி, ரமேஷ், செல்வராஜன், உலகநாதன், சிவா, மனோகரன் பங்கேற்றனர்.போராட்டத்தில், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வு பெற்றோர், பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துகாப்பீடுகளை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X