கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' வழக்கில் ஆசிரியர்கள் இருவருக்கு சிறை

Added : நவ 23, 2021
Share
Advertisement
விழுப்புரம் : மாணவிக்கு ரோஜா பூ கொடுத்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு, விழுப்புரம் 'போக்சோ' நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 2018ம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்தார்.அதே ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது,
 'போக்சோ' வழக்கில் ஆசிரியர்கள் இருவருக்கு சிறை

விழுப்புரம் : மாணவிக்கு ரோஜா பூ கொடுத்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு, விழுப்புரம் 'போக்சோ' நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 2018ம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்தார்.அதே ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த நிர்மல் பிரேம்குமார், 43; என்பவர், சிறுமியின் கையை முறுக்கி ரோஜா, மல்லிகைப் பூ மற்றும் சாக்லேட் கொடுத்துள்ளார்.

மறுநாள் 15ம் தேதி சமூக அறிவியல் ஆசிரியர் லாரன்ஸ், 31; தமிழ் ஆசிரியர் நிர்மல் பிரேம்குமார் இருவரும் சிறுமியை உடற்கல்வி ஆசிரியர் அறையில் வைத்து மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரில், கள்ளக்குறிச்சி மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் நிர்மல் பிரேம்குமார், லாரன்சை கைது செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி முத்துக்குமாரவேல் நேற்று தீர்ப்பு கூறினார். நிர்மல் பிரேம்குமாருக்கு மூன்று ஆண்டு சிறை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம்; லாரன்சுக்கு இரண்டு ஆண்டு சிறை, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.நிர்மல் பிரேம்குமார், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், மயம்பாடி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். லாரன்ஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X