பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கவுன்சிலர் நிவாரணம் வழங்கல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்-மழையால் பாதிக்கப்பட்ட பேரால் கிராமத்தில் தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால், ரிஷிவந்தியம் அடுத்த பேரால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜன் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.தொடர்ந்து கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்-மழையால் பாதிக்கப்பட்ட பேரால் கிராமத்தில் தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால், ரிஷிவந்தியம் அடுத்த பேரால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜன் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.தொடர்ந்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். மேலும், பேரால் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் அமிர்தவள்ளி கோவிந்தராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சின்னையன், சமிளா ராஜ்குமார், நிர்வாகிகள் நாராயணன், பாலு, ராஜூ, முத்துசாமி, ஜெயராமன், ராதாகிருஷ்ணன், தனலட்சுமி, கொளஞ்சி, அல்லிமுத்து, பாக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், சித்தால், சாத்தப்புத்துார், பாவந்துார் ஆகிய கிராமங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X