நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பெருமழையின் பாதிப்புகளை நேற்று மத்திய அரசின் சார்பில் பாவ்யா பாண்டே, தங்கமணி, ஆர்.பி.கவுல் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு பார்வையிட்டது.
கன்னியாகுமரியில் புகைப்படகண்காட்சி மூலம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கலெக்டர் அரவிந்த் விளக்கினார். சில இடங்களில் மட்டும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட குழுவினர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு திரும்பினர். விஜய்வசந்த் எம்.பி. இந்த குழுவினரை சந்தித்து பாதிப்புகளை சரி செய்ய குமரி மாவட்டத்துக்கு 260 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 80 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். இந்த தொகுதியில் ஏற்பட்ட சேதங்களின் கணக்கீடு விபரங்களையும் அவர் சமர்ப்பித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE