பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாச்சனூர் மலட்டாறு தரைப்பாலம் ஆய்வு

Added : நவ 23, 2021
Share
Advertisement
விழுப்புரம்-திருப்பாச்சனுார் மலட்டாறு தரைப்பாலம் மற்றும் தளவானுார் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுார் மலட்டாறு தரைப்பாலம் கன மழையால் நேற்று முன்தினம் உடைந்து சேதமடைந்தது.இதேபோன்று, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தளவானுார் அரசு உயர்நிலைப் பள்ளி

விழுப்புரம்-திருப்பாச்சனுார் மலட்டாறு தரைப்பாலம் மற்றும் தளவானுார் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனுார் மலட்டாறு தரைப்பாலம் கன மழையால் நேற்று முன்தினம் உடைந்து சேதமடைந்தது.இதேபோன்று, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தளவானுார் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கரை பகுதி சேதமடைந்தது.இதையடுத்து, திருப்பாச்சனுார் தரைப்பாலம் மற்றும் தளவானுார் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் சேதமடைந்த ஆற்றின் கரை பகுதிகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை காரணமாக தென்பெண்ணை ஆறு பகுதிகளில் அதிகளவு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பாச்சனுார் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நெடுஞ்சாலைத்துறை மூலம் அந்த பகுதியில் தற்காலிக மாற்றுப்பாதை ஏற்படுத்தி போக்குவரத்து தடையில்லாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், கன மழையால் வெள்ள பெருக்கு எற்பட்டு பாதித்துள்ள அனைத்து இடங்களிலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் துரிதமான முறையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.வெள்ள பெருக்கால் பாதிப்படைந்த வீடுகள், கால்நடைகள் மற்றும் விவசாய பயிர்களை துறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி நிவாரணம் வழங்கப்படும்' என்றார்.கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சிவசேனா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X