பொது செய்தி

இந்தியா

ஷவரில் பம்பை தண்ணீர் பக்தர்கள் நீராட ஏற்பாடு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சபரிமலை : பம்பை ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் பக்தர்கள் குளிக்க ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை ஒன்றாம் தேதி சபரிமலை நடை திறந்தது முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பம்பா, கக்கி, ஆலக்கோடு அணைகள் முழு கொள்ளளவில் உள்ளன. லேசான மழை பெய்தாலும் வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் விடப்படுகிறது. இதனால் பம்பை ஆற்றில் பாயும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகமாக உள்ளது.
 ஷவரில் பம்பை தண்ணீர் பக்தர்கள் நீராட ஏற்பாடு

சபரிமலை : பம்பை ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் பக்தர்கள் குளிக்க ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை ஒன்றாம் தேதி சபரிமலை நடை திறந்தது முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பம்பா, கக்கி, ஆலக்கோடு அணைகள் முழு கொள்ளளவில் உள்ளன. லேசான மழை பெய்தாலும் வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் விடப்படுகிறது. இதனால் பம்பை ஆற்றில் பாயும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் குளிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பம்பை நதிக்கரையில் 60 ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றுநீர் பம்பிங் செய்யப்பட்டு இந்த ஷவரில் பாய்கிறது. பக்தர்கள் புனித நீராடி விட்டு மலையேறலாம். பக்தர்கள் முகக்கவசங்களை அதற்கொன அமைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போட வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.பக்தர்கள் தேவைப்படும் விபரங்களை சன்னிதானம் தகவல் மையம் டெலிபோன் எண் 04735 202048 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X