சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி தலைமையாசிரியர் மாற்றம்; பெற்றோர்கள், மாணவர்கள் மோதல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
சிவகங்கை : மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை மாற்றக்கூடாது என பெற்றோர்களும், மாற்றம் சரியே என மாணவர்களும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.கல்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்தவர் சேவியர் ஆரோக்கியதாஸ்.ஒரு தரப்பினர் தலைமையாசிரியர் சேவியர்

சிவகங்கை : மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை மாற்றக்கூடாது என பெற்றோர்களும், மாற்றம் சரியே என மாணவர்களும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கல்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்தவர் சேவியர் ஆரோக்கியதாஸ்.ஒரு தரப்பினர் தலைமையாசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக அவர் மிளகனுார் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.பெற்றோர்கள் சேவியர் ஆரோக்கியதாஸ் சிறப்பாக பணிபுரிந்தார். அவரை தேவையில்லாத நபர்களின் புகாரின் பேரில் பணியிட மாற்றம்செய்துள்ளனர். மீண்டும் கல்குறிச்சி பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும், என அனைத்து விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் புகார் தெரிவித்தனர்.

அங்கு பயிலும் மாணவர்கள் பழைய தலைமையாசிரியர் மாற்றம் செய்தது சரியே, மீண்டும் அவரை கல்குறிச்சி பள்ளிக்கு பணியிட மாற்றம்செய்யக்கூடாது, என கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்துள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்களும், அவர்களது குழந்தைகளும் எதிர், எதிரே நின்றதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளிக்கு படிக்க அனுப்பினால், மனு கொடுக்க எப்படி வரலாம் என பெற்றோர்கள் தரப்பில் கண்டித்தனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X