பொது செய்தி

இந்தியா

காட்டு யானைகள் நடமாட்டம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Added : நவ 23, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைப்பார்த்து சுற்றுலா பயணிகள்மகிழ்ச்சி அடைந்து வருகிறனர்.மூணாறைச்சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில்காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதே சமயம் சுற்றுலா பயணிகள் அவற்றைப்பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அவற்றை பார்க்க இரவில் ஜீப்புகளில்
 காட்டு யானைகள் நடமாட்டம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மூணாறு : கேரளா மூணாறில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைப்பார்த்து சுற்றுலா பயணிகள்மகிழ்ச்சி அடைந்து வருகிறனர்.

மூணாறைச்சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில்காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதே சமயம் சுற்றுலா பயணிகள் அவற்றைப்பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அவற்றை பார்க்க இரவில் ஜீப்புகளில் சாகச பயணம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையின் கரையோரம், அங்குள்ள மாட்டுப்பண்ணைக்கு தீவனத்திற்கு 600 எக்டேரில் புல் வளர்க்கப்படுகிறது. பசுமையாக காணப்படும் புல் மேடுகளில் காட்டு யானைகள் மாத கணக்கில் தீவனத்திற்கு முகாமிடும்.தற்போது இரண்டு குட்டிகள் உட்பட ஐந்து யானைகள் ஒரு மாதத்திற்கு மேலாக முகாமிட்டுள்ளன. அவை அவ்வப்போது அணையின் கரையோரம் சுற்றித்திரிகின்றன. அவற்றை படகுகளில் பயணித்தவாறு பயணிகள் ரசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X