சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 வீடுகளில் திருட்டு: போலீஸ் விசாரணை

Added : நவ 23, 2021
Share
Advertisement
மயிலம்-மயிலம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலம் அடுத்த கேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். மயிலத்தில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றவர் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 2 கிராம் நகை திருடு போயிருப்பது

மயிலம்-மயிலம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலம் அடுத்த கேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். மயிலத்தில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றவர் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 2 கிராம் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.இதேபோன்று, அதே பகுதியில் அரிபதி 47; என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த பட்டுப் புடவைகள், பித்தளை சாமான்கள் மற்றும் 300 ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். புகார்களின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X