பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் திருத்த முகாமில் 30,615 படிவங்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் சுருக்க திருத்த முகாமில் இதுவரை 30 ஆயிரத்து 615 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுட்பட்டு 1,272 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.மாவட்டத்தில் கடந்த 13, 14 மற்றும் 20, 21 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் அனைத்து

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் சுருக்க திருத்த முகாமில் இதுவரை 30 ஆயிரத்து 615 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுட்பட்டு 1,272 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.மாவட்டத்தில் கடந்த 13, 14 மற்றும் 20, 21 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடந்தது.முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி திருத்தம், மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பொதுமக்கள் உரிய படிவங்களை நிரப்பி, அத்துடன் ஆவணங்களை இணைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் தரும்படி அறிவுறுத்தப்பட்டது.மாவட்டத்தில் கடந்த 4 நாட்கள் நடந்த முகாமில் உளுந்துார்பேட்டை தொகுதியில் 8,904, ரிஷிவந்தியம் 7,179, சங்கராபுரம் 6,609, கள்ளக்குறிச்சி 7,923 என மொத்தம் 30 ஆயிரத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. வரும் 27, 28 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X