தமிழ்நாடு

அமைக்கப்படுமா? கள்ளக்குறிச்சி நகரிலேயே கலெக்டர் அலுவலகம்....மார்க்கெட் கமிட்டியை இடம் மாற்ற கோரிக்கை

Added : நவ 23, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவங்கப்பட்டது.தற்காலிக கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது. அதேபோல், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உலகங்காத்தான் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில்

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவங்கப்பட்டது.

தற்காலிக கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது. அதேபோல், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உலகங்காத்தான் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் இயங்குகிறது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஒரு பகுதியில், பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகிறது.இந்நிலையில், நிரந்தரமாக கலெக்டர் அலுவலக வளாகம் அமைக்க, கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராம எல்லையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.இதில் கலெக்டர் அலுவலகம் கட்ட பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியது.இதற்கிடையே கோவில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோவில் இடத்தை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். நிரந்தரமாக்கக் கூடாது. மாத வாடகை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ஐகோர்ட் விதித்து நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணைக்கு அனுமதி வழங்கியது.இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும் என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையில் சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.கோவில் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது வேறு இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே, தற்போது தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் இயங்கக் கூடிய மார்க்கெட் கமிட்டி வளாகம் நான்கரை ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. எனவே, மார்க்கெட் கமிட்டி இடத்திலேயே நிரந்தர கலெக்டர் அலுவலகம் கட்ட வேண்டும்.

மார்க்கெட் கமிட்டிக்கு வேறு இடத்தை தேர்வு செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதேபோல், மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள பி.டி.ஓ., அலுவலக வளாகம், ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., - பொதுப்பணித்துறை (நீர் ஆதாரம்) ஆகிய அலுவலகங்கள் உள்ள இடங்களை முழுமையாக எடுத்து கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.அங்குள்ள அலுவலகங்களை சிரமின்றி நகரில் ஆங்காங்கே உள்ள அரசுக்கு சொந்தமான மாற்று இடத்தில் கொண்டு செல்ல வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X