சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெலிங்டனில் விதி மீறிய கட்டடங்கள் இடிப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
குன்னுார், : குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், விதி மீறிய கட்டடங்களை இடிக்கும் பணி நடந்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய விதிகள்படி, சொந்த இடம் உள்ளவர்கள், 50 சதவீத இடத்தில் மட்டுமே முறையாக அனுமதி பெற்று கட்டடம் கட்ட வேண்டும்.இறுதி 'நோட்டீஸ்'இந்த விதிகளை மீறி, பலர் கட்டிய கட்டடங்களுக்கு எதிராக வாரியத்தில் புகார்
 வெலிங்டனில் விதி மீறிய கட்டடங்கள் இடிப்பு

குன்னுார், : குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், விதி மீறிய கட்டடங்களை இடிக்கும் பணி நடந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய விதிகள்படி, சொந்த இடம் உள்ளவர்கள், 50 சதவீத இடத்தில் மட்டுமே முறையாக அனுமதி பெற்று கட்டடம் கட்ட வேண்டும்.இறுதி 'நோட்டீஸ்'இந்த விதிகளை மீறி, பலர் கட்டிய கட்டடங்களுக்கு எதிராக வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, 2016ல் அளவீடு செய்யப்பட்டு, விதி மீறிய கட்டட உரிமையாளர்களுக்கு இறுதி 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

இது தொடர்பாக, கட்டட உரிமையாளர்கள் சிலர், உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.'அனுமதியற்ற, விதி மீறிய கட்டடங்களை இடிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.

இதனால், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பலிச்சா மேற்பார்வையில், அக்டோபர் 26ல் முதல் கட்டமாக, 14 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, நேற்று 18 கட்டடங்களை இடிக்கும் பணி துவங்கியது. 853 சதுர அடிவாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மொத்தம் 126 அனுமதியற்ற கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது. 'லுார்துபுரத்தில் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன் கட்டி, வேறு ஒருவருக்கு விற்பனை செய்த 853 சதுர அடியில் உள்ள வீடு உட்பட இரு வீடுகள் முழுமையாக இடிக்கப்பட்டன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X