சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு இடங்களில் தீ விபத்துகுளிர்சாதன பெட்டிகள் சேதம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் இரண்டு இடங்களில் நடந்த தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவா, 54; மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 10:15 மணிக்கு கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடலுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.தீ

கடலுார்-கடலுாரில் இரண்டு இடங்களில் நடந்த தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவா, 54; மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 10:15 மணிக்கு கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடலுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி, உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. கடலுார், புதுநகர் போலீசார் விசாரணை நடத்தியதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரிந்தது.மற்றொரு விபத்து: கடலுார், முதுநகர் அடுத்த காரைக்காடு, டி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வைரம், 64; இவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்த கம்ப்ரஸர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.கடலுார் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைத்தனர்.தீ விபத்தில் குளிர்சாதன பெட்டி, மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் எரிந்து சேதமானது. முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X