பொது செய்தி

தமிழ்நாடு

தேர்ச்சிபெற்ற வேளாண் பட்டதாரிகள் 365 பேருக்கு பணி வழங்க வலியுறுத்தல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கம்பம் : தேர்ச்சி பெற்ற 365 வேளாண் பட்டதாரிகள், வேளாண் அலுவலர் பணியிடம் வழங்க வலியுறுத்தி உள்ளனர்.வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர், உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர், இயக்குனர் என்ற வரிசையில் பணியிடங்கள் உள்ளன. இதில் வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தேர்வாணையம் மூலம் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள்

கம்பம் : தேர்ச்சி பெற்ற 365 வேளாண் பட்டதாரிகள், வேளாண் அலுவலர் பணியிடம் வழங்க வலியுறுத்தி உள்ளனர்.

வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர், உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர், இயக்குனர் என்ற வரிசையில் பணியிடங்கள் உள்ளன. இதில் வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தேர்வாணையம் மூலம் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். 2020 ஏப்ரலில் 365 வேளாண் பட்டதாரிகள் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு செப்., நேர்முகத் தேர்வு, நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தன.

ஆனால் இதுவரை பணியிடங்கள் வழங்கவில்லை. இத் துறையில் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் வேளாண் அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இதில் கடந்தாண்டு 145 பேர்களுக்கு உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றனர். பலர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். 500 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் வேளாண் துறையில் பணிகளில் தேக்கநிலை உள்ளது. எனவே, தேர்ச்சி பெற்ற வேளாண் அலுவலர்களுக்கு பணியிடங்கள் வழங்க கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X