தமிழ்நாடு

அவதி - வெள்ளம் வடியாத நகர் பகுதிகளில் மக்கள்... கடலூரில் தொற்று நோய் பரவும் அபாயம்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021
Share
Advertisement
 கடலுார்-கடலுாரில் வெள்ளம் சூழ்ந்த பல நகர பகுதிகளில் தண்ணீர் வடியாமல் குளமாக தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடுடன், மக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கடலுாரில் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம், வண்டிப்பாளையம்,
 அவதி - வெள்ளம் வடியாத நகர் பகுதிகளில் மக்கள்... கடலூரில் தொற்று நோய் பரவும் அபாயம்

 கடலுார்-கடலுாரில் வெள்ளம் சூழ்ந்த பல நகர பகுதிகளில் தண்ணீர் வடியாமல் குளமாக தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடுடன், மக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கடலுாரில் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம், வண்டிப்பாளையம், திருப்பாதிரிபுலியூர் உட்பட பல குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. அரசு சார்பில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

ஆனாலும், மழைநீர் முழுமையாக வடியவில்லை. இந்நிலையில், கடலுாரில் 18 ம் தேதி ஒரே நாளில் பெய்த 15 செ.மீ., மழையால் மீண்டும் தாழ்வான பகுதிகள் குளமாக மாறியது. அத்துடன், 19 ம் தேதி அதிகாலை தென்பெண்ணையாற்றில் எதிர்பாராத பெருவெள்ளம் வந்தது. 1.50 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டதால், மாவட்டத்தில் பண்ருட்டியில் இருந்து கடலுார் வரை 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் மற்றும் நுாற்றுக்கணக்கான நகர் பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. கடுமையான பாதிப்பு கடலுாரில் தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள செம்மண்டலம், குண்டு உப்பலவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்து, கரையை தாண்டி நகர் பகுதிகளில் தண்ணீர் உட்புகுந்தது. இதனால், கடலுார் செம்மண்டலம் குறிஞ்சி நகர், வெளி செம்மண்டலம், கணபதி, நகர், சூரியா நகர், அரசு குடியிருப்பு, திடீர்குப்பம், கோண்டூர் கம்பர் தெரு, செயின்ட் ஜோசப் நகர் உட்பட பல நகர் பகுதிகள் கடுமையாக பாதித்தன.வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பல இடங்களில் மாடி வீடுகளிலும், விடுதிகளில் அறை எடுத்தும் தங்கினர். பலர் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொக்லைன் மூலம் வடிகால் ஏற்படுத்தி, மோட்டார் பம்பு மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி நடக்கிறது. நோய் பரவும் அபாயம்ஆனாலும், 3 நாட்களாக தண்ணீர் வடியாமல் பல நகர் பகுதிகளில் குளமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால், மக்கள் கடும் அவதியடைகின்றனர்.

வீடுகளைச் சுற்றி இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியதால், மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். வெளி செம்மண்டலம், குறிஞ்சி நகர் பகுதிகளில் தீயணைப்பு துறை படகு மூலம் மீட்பு பணி தொடர்கிறது.இந்நிலையில், நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கியதால் பாசி படர்ந்தும், இலைச் சருகுகள், அள்ளாத குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. சில இடங்களில் பன்றி, எலி, நாய், பூனை போன்றவை இறந்து கிடப்பதால் காய்ச்சல் தொற்று, டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில், போர்க்கால அடிப்படையில் தேங்கிய தண்ணீரை விரைந்து வெளியேற்றுவதுடன், சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X