வாகனம் மோதி ஆய்வாளர் பலி; முதல்வர் ரூ.50 லட்சம் நிவாரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி ஆய்வாளர் பலி; முதல்வர் ரூ.50 லட்சம் நிவாரணம்

Added : நவ 23, 2021
Share
கரூர் : கரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மோட்டார் வாகன ஆய்வாளர் உயிர் இழந்தார். அவரது குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை இனுகூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ், 57; கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை 9:30 மணிக்கு கரூர் - திருச்சி

கரூர் : கரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மோட்டார் வாகன ஆய்வாளர் உயிர் இழந்தார். அவரது குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை இனுகூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ், 57; கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை 9:30 மணிக்கு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்கல்பட்டி அருகே, உடலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

வாகன தணிக்கை பணியில் கனகராஜ் ஈடுபடுவது வழக்கம். அப்போது, வாகனம் மோதியதில் இறந்தாரா அல்லது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டதா என, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கனகராஜுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தகவல் அறிந்த, முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய், நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.


அன்புமணி சந்தேகம்


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:கரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பலிக்கு காரணம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரி பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி விலகும் முன், அடுத்த நிகழ்வு நடந்திருப்பது கவலை அளிக்கிறது. ஆபத்தான சூழலில் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X