பொது செய்தி

தமிழ்நாடு

முல்லை பெரியாறு அணையில் கேரளாவுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கூடலுார் : பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை குறைந்ததால், கேரளாவுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது முல்லை பெரியாறு அணை. மொத்த உயரம் 152 அடி.நீர்பிடிப்பில் சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், நீர்மட்டம் 141 அடியை கடந்தது. நேற்று நீர்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் மழை பதிவாகவில்லை. இதனால் நேற்று

கூடலுார் : பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை குறைந்ததால், கேரளாவுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது முல்லை பெரியாறு அணை. மொத்த உயரம் 152 அடி.நீர்பிடிப்பில் சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், நீர்மட்டம் 141 அடியை கடந்தது. நேற்று நீர்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் மழை பதிவாகவில்லை. இதனால் நேற்று காலை 1,992 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 467 கன அடியாக குறைந்தது.

அணை நீர்மட்டம் உயர்ந்த நிலையில், அக்டோபர் 29ல் கேரளப் பகுதிக்கு, எட்டு ஷட்டர்கள் வாயிலாக 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின், நவம்பர் 6ல் மழை குறைவால், கேரள பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. மீண்டும் நவம்பர் 19ல் இரு ஷட்டர்கள் வாயிலாக, 781 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

தற்போது மழையின்றி நீர் வரத்து குறைந்ததால், இரண்டாவது முறையாக நீர் திறப்பு நேற்று காலை நிறுத்தப்பட்டது.தமிழகத்திற்கு குடிநீர், சாகுபடிக்காக திறக்கப்பட்டிருந்த 2,000 கன அடி நீர், நேற்று காலை 467 கன அடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 142 அடியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X