சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காப்பீட்டு பணம் 28 லட்சம் சுருட்டல்; நீதிமன்ற ஊழியரின் மோசடி அம்பலம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, அருப்புக்கோட்டை காயிதே மில்லத் கிழக்கு தெருவை சேர்ந்த உசேன் அக்பர் பணியில் இருந்தபோது நீதிமன்றத்தில் உள்ள விபத்து காப்பீட்டு வழக்குகளின் செட்டில்மென்ட் பணம் 28.10 லட்சம் மோசடி செய்தது கூடுதல் மாவட்ட நீதிபதி சரண் ஆய்வின் போது கண்டிபிடிக்கப்பட்டது.இப்பணத்தை நண்பர்கள்

விருதுநகர் : விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, அருப்புக்கோட்டை காயிதே மில்லத் கிழக்கு தெருவை சேர்ந்த உசேன் அக்பர் பணியில் இருந்தபோது நீதிமன்றத்தில் உள்ள விபத்து காப்பீட்டு வழக்குகளின் செட்டில்மென்ட் பணம் 28.10 லட்சம் மோசடி செய்தது கூடுதல் மாவட்ட நீதிபதி சரண் ஆய்வின் போது கண்டிபிடிக்கப்பட்டது.

இப்பணத்தை நண்பர்கள் ,உறவினர் அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் வங்கி கணக்கிற்கு ரூ.7.40 லட்சம், அரக்கோணம் கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த கோகுலகிருஷ்ணமூர்த்தி வங்கி கணக்கிற்கு ரூ.13 .60 லட்சம், அருப்புக்கோட்டை ஆஜிஸ்நகரை சேர்ந்த செய்யது முகம்மது வங்கி கணக்கிற்கு ரூ. 7 .10 லட்சத்தை டிபாசிட் செய்துள்ளார்.

பெற்றோர்களின் விபத்து காப்பீட்டு பணம் குழந்தைகள் மேஜர் ஆன பின்பு தான் வழங்கப்படும். அதுவரை நீதிமன்ற கட்டுபாட்டில் இருக்கும். இந்த பணத்தை தான் உசேன் அக்பர் கையாடல் செய்துள்ளார்.மோசடி கண்டறியபட்டதும் உசேன் அக்பர் தற்கொலை முயற்சி செய்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X