பொது செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியின் உடல் அடக்கம்; 125 கி.மீ., சுற்றிய உறவினர்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
வேலுார் : தொடர் மழையால் தரைப்பாலம் மூழ்கியதால், இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய, கிராம மக்கள் 125 கி.மீ., சுற்றிச் சென்றனர்.வேலுார் மாவட்டம், மோர்தானா அருகே போடியப்பேட்டையைச் சேர்ந்தவர் முனியம்மாள், 60. கணவர் இறந்ததால், நத்தமேட்டில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை, சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். தொடர்
 மூதாட்டியின் உடல் அடக்கம்; 125 கி.மீ., சுற்றிய உறவினர்கள்

வேலுார் : தொடர் மழையால் தரைப்பாலம் மூழ்கியதால், இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய, கிராம மக்கள் 125 கி.மீ., சுற்றிச் சென்றனர்.

வேலுார் மாவட்டம், மோர்தானா அருகே போடியப்பேட்டையைச் சேர்ந்தவர் முனியம்மாள், 60. கணவர் இறந்ததால், நத்தமேட்டில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை, சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். தொடர் மழையால் போடிப்பேட்டை செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.

இதனால், அவரது உடலை நேற்று வேனில் ஏற்றி, ஆந்திர மாநிலம் சித்துார், சைனகுண்டா வழியாக, 125 கி.மீ., கடந்து போடியப்பேட்டைக்குச் சென்றனர்.அங்கிருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழி வெள்ள நீரால் சூழப்பட்டது. இதனால், சடலத்தை வயல்வெளியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

மொத்தம் 25 கி.மீ., செல்ல வேண்டியவர்கள், தரைப்பாலம் மூழ்கியதால், 125 கி.மீ., சுற்றிச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X