மின்இணைப்பு கோரி தர்ணா: 8 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்இணைப்பு கோரி தர்ணா: 8 பேர் கைது

Added : நவ 23, 2021
Share
பெண்ணாடம்-கருங்குழி தோப்பு பகுதி மக்கள் மின்இணைப்பு கோரி, உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 7 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை. குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க உதவி பொறியாளரிடம்

பெண்ணாடம்-கருங்குழி தோப்பு பகுதி மக்கள் மின்இணைப்பு கோரி, உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 7 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை. குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க உதவி பொறியாளரிடம் கேட்டனர். கோவில் நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்று வருமாறு மின்துறையினர் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:30 மணியளவில் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் வழக்கறிஞர் பத்மநாபன் தலைமையில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் முன், விருதை - திட்டக்குடி சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X