கலெக்டர் அலுவலக வாயிலில் விவசாயிகள் திடீர் தர்ணா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலக வாயிலில் விவசாயிகள் திடீர் தர்ணா

Added : நவ 23, 2021
Share
கடலுார்-கலெக்டரிடம் மனு அளிக்க கூட்டமாக செல்ல அனுமதி மறுத்ததால் கடலுார் கலெக்டர் அலுவலக வாயிலில் விவசாயிகள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த ஆண்டு பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்த குமராட்சி அடுத்த சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், எடையார், சிறகிழந்தநல்லுார், காட்டுக்கூடலுார், லட்சுக்குடி பகுதி விவசாயிகளுக்கு, பயிர் இன்சூரன்ஸ் வழங்க

கடலுார்-கலெக்டரிடம் மனு அளிக்க கூட்டமாக செல்ல அனுமதி மறுத்ததால் கடலுார் கலெக்டர் அலுவலக வாயிலில் விவசாயிகள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த ஆண்டு பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்த குமராட்சி அடுத்த சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், எடையார், சிறகிழந்தநல்லுார், காட்டுக்கூடலுார், லட்சுக்குடி பகுதி விவசாயிகளுக்கு, பயிர் இன்சூரன்ஸ் வழங்க கோரி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மனு அளிக்க கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த போலீசார், நான்கு பேர் மட்டும் செல்ல கூறி, தடுத்தனர். இதனால் விவசாயிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர்கள் தேவேந்திரன், குருமூர்த்தி, கவிதா ஆகியோர் விரைந்து வந்து, விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின், சமூக இடைவெளி கடைபிடித்து சென்று கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறினார். இதையேற்ற விவசாயிகள் தர்ணாவை கைவிட்டு, கலெக்டரை சந்தித்து மனு அளித்து வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X