சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் இயக்க கோரி முற்றுகை கிராம மக்களால் பரபரப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-அரசு டவுன் பஸ் இயக்ககோரி, கிராம மக்கள் 'டைம் ஆபீசை' முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு காலை 8:30; மாலை 4:30 மணிக்கு, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் (தடம் எண் 3) தினசரி இயக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அறிவிப்புமின்றி

விருத்தாசலம்-அரசு டவுன் பஸ் இயக்ககோரி, கிராம மக்கள் 'டைம் ஆபீசை' முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு காலை 8:30; மாலை 4:30 மணிக்கு, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் (தடம் எண் 3) தினசரி இயக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அறிவிப்புமின்றி டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை 'டைம்' ஆபீசில் இருந்த அலுவலர்களிடம் கிராம மக்கள் மாற்று பஸ் இயக்க கோரிக்கை வைத்தனர்.ஆனால், வரும் திங்கள்கிழமை (நேற்று) பஸ் இயக்கப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் கூறினர். நேற்று மாலை நீண்ட நேரமாகியும் டவுன் பஸ் வரவில்லை. இதையடுத்து கிராம மக்கள் 'டைம்' ஆபீசில் இருந்த அதிகாரிகளிடம் முறையிட்டனர். டிரைவர்கள் பற்றாக்குறையால் டவுன் பஸ் இயக்க முடியவில்லை. போக்குவரத்து பணிமனைக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிடுங்கள் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாணவர்கள் டைம் ஆபீசை திடீரென முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும், மாற்று பஸ் இயக்வில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரவித்தனர். பின், மாலை 5:30 மணிக்கு அவர்கள் செல்ல மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X