அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வானதிக்கு மேடையில் இடம்; அ.தி.மு.க.,வினருக்கு முதல் வரிசை

Added : நவ 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோவை : ''இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம். அதில், முதலிடம் கோவைக்கு இருக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.கோவை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், புதிய திட்டங்களை துவக்கி வைத்தல், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வானதிக்கு மேடையில் இடம்; அ.தி.மு.க.,வினருக்கு முதல் வரிசை

கோவை : ''இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம். அதில், முதலிடம் கோவைக்கு இருக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

கோவை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், புதிய திட்டங்களை துவக்கி வைத்தல், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை தேர்தலில், மற்ற மாவட்டங்களில் பெருவாரியாக வெற்றி கிடைத்திருந்தாலும், கோவை மாவட்டத்தில் நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதை விரிவாக பேசி, அரசியலாக்க விரும்பவில்லை.

வரும் வழியில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். தி.மு.க., ஆட்சியில் மனு கொடுத்தால் அதன் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். லட்சக்கணக்கான மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். ஒவ்வொரு தனி மனிதனின் கவலையை தீர்க்கும் அரசாக இது இருக்கும். சென்னையை போல் கோவை மாநகராட்சிக்கு மிக முக்கியத்துவம் அளிக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. கோவையை பொறுத்தவரை, வளம் கொண்ட தொழில் மாவட்டம். சிறு குறு தொழில்கள் அதிகம்.

மாநிலத்துக்கு ஏற்றுமதி வருவாய் கிடைக்கக்கூடிய மாவட்டமும் இதுவே. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிடக்கூடிய மாவட்டம். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய இடம். இது போன்ற பெருமை அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே என் ஆசை. இந்தியாவில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை வளர்த்தெடுக்க வேண்டும். தொழில் துறை வளர்ச்சி மூலம் மக்களை வளப்படுத்த முடியும். மக்களின் வளர்ச்சியிலேயே, நாட்டின் வளர்ச்சி அமைந்திருக்கிறது.

இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம். அதில், முதலிடம் கோவைக்கு இருக்கும்.நான் எப்போதும் அதிகமாக பேச மாட்டேன்; செயலில் என் பணி இருக்கும். பேச்சை குறைத்து, செயலில் நம் திறமையை காட்டு என்பர். தலைசிறந்த மாவட்டமாக கோவையை உருவாக்க பணியாற்றத் துவங்கி விட்டோம். இதற்கு ஒத்துழைப்பு, ஆதரவு கொடுக்க வேண்டும்.

கோவை மாநகராட்சியின் மையப்பகுதியில் உள்ள சிறைச்சாலை, நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் நடைபாதை, உள்ளரங்கு, வெளியரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் செம்மொழிப்பூங்கா இரு கட்டங்களாக, 200 கோடி ரூபாயில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதேபோல, திருப்பூரில் நடந்த அரசு விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

'கோ பேக் ஸ்டாலின்'முதல்வர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'டுவிட்டர்' வலைதளத்தில் #GobackStalin எனும் 'ஹேஷ்டேக்'கை எதிர்க்கட்சியினர் 'டிரெண்ட்' செய்தனர். இது, தி.மு.க.,வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 'இதற்கு பதிலடி தரும் வகையில், 'முதல்வரை கோவை வரவேற்கிறது' என, தி.மு.க.,வினரின் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.


வானதிக்கு பேச வாய்ப்பு!


விழா நடந்த வ.உ.சி., மைதானம், கோவை தெற்கு தொகுதிக்குள் இருப்பதால், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வந்திருந்தார். முதல்வருக்கு எதிரே, கீழ் வரிசையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்.அதை கவனித்த ஸ்டாலின், மேடைக்கு அழைத்து இருக்கையில் அமர வைக்க அறிவுறுத்தினார். முதல் வரிசையில் முதல் இருக்கை தரப்பட்டது. மேடைக்கு வந்த வானதி, முதல்வருக்கு வணக்கம் தெரிவித்து, அமர்ந்தார்.

விழா 12:00 மணிக்கு துவங்குவதாக இருந்தது; 45 நிமிடம் தாமதமாக துவங்கியபோதிலும், வானதி பேசுவதற்கு முதல்வர் வாய்ப்பளித்தார். இதேபோல், மேடையில் தி.மு.க., - எம்.பி.,க் கள் ராஜா, சண்முகசுந்தரம், செல்வராஜ் ஆகியோர் இருந்தபோதிலும், மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., நடராஜன் பேசுவதற்கும் வாய்ப்பளித்தார்.


அ.தி.மு.க.,வினருக்கு முதல் வரிசை


கோவை மாவட்டத்தில், ஒன்பது தொகுதிகளில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அரசு விழா என்பதால், அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பந்தலில், மேடைக்கு எதிரே முக்கிய பிரமுகர்கள் அமரும் பகுதியில், முதல் வரிசையில் அவர்களுக்கு இருக்கை போடப்பட்டிருந்தது. ஆனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
28-நவ-202107:54:57 IST Report Abuse
N Annamalai ஆரோக்கியமான நிகழ்வு.முதல்வரின் செயல் போற்றுதலுக்கு உரியது .சொல்வதை விட செயல் முக்கியம் /
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26-நவ-202116:29:13 IST Report Abuse
NicoleThomson வரவேற்க தக்க மாற்றம் ஆனால் நம்ப முடியவில்லை
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-நவ-202107:38:18 IST Report Abuse
NicoleThomsonநானும் அந்த காணொளியை பார்த்தேன் அங்கே ஒரு செர்/நாற்காலி இடம் எம்ப்டி ஆக இருந்ததை வெகு கவனமாக தவிர்க்க ஆடிய நாடகம் என்று கூட படுகிறது ....
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-நவ-202123:11:26 IST Report Abuse
spr தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அந்தப் பகுதியில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தி முதல்வர் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறார் இதனால் மத்திய அரசின் உதவியும் கிடைக்கும் அப்பகுதி பலன் அடையும் எனவே பாராட்டுவோம் ஊடகங்கள் செய்தித்தாள்கள் இதனை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X