பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

Added : நவ 23, 2021
Advertisement
கடலுார்-கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 10:00 மணிக்கு கலச பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது. பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம், ஹோமங்கள்

கடலுார்-கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 10:00 மணிக்கு கலச பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது. பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம், ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. பின், பாடலீஸ்வரருக்கு கலச அபிஷேகம் மற்றும் 108 சங்கு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெரியநாயகிக்கும் கலச அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.நடுவீரப்பட்டுநடுவீரப்பட்டு கைலசாநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர், மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் கோவில்களில் நேற்று கார்த்திகை மாத முதல் சோமவார பூஜை நடந்தது. மதியம் விநாயகர், ஈஸ்வரர், அம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X