திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் இறந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி, 45. இவர் உறவினர்கள் 23 பேருடன் நேற்று காலை உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சரக்கு வேனில் கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வீரப்பார் கிராமத்திற்கு சென்றார்.ஆமூர் பஸ் நிறுத்தம் அருகே முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் ஏழுமலை 40, பிரேக் போட்டார்.
அப்போது, வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், தேன்மொழி, சேகர், 53 ஆகிய இருவரும் இறந்தனர். டிரைவர் ஏழுமலை உட்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமணன், 45, என்பவர் இறந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE