பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் 9,563 பேர் இடைநின்ற மாணவர்கள்; சர்வே பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் தொய்வு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் நடத்திய சர்வேயில் பள்ளி செல்லா குழந்தைகள் 9,563 பேர் இருப்பது கண்டறியப்பட்டு 9,078 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மத்திய, மாநில அரசுகள் அடிப்படை கல்வியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொடக்க முதல் மேல்நிலை கல்வி வரை கற்பித்து வருகிறது. கொரோனா கால


சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் நடத்திய சர்வேயில் பள்ளி செல்லா குழந்தைகள் 9,563 பேர் இருப்பது கண்டறியப்பட்டு 9,078 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் அடிப்படை கல்வியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொடக்க முதல் மேல்நிலை கல்வி வரை கற்பித்து வருகிறது. கொரோனா கால கட்டத்தில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் இந்த வயது குழந்தைகள் பெற்றோருடன் பணிக்கு சென்றனர்.

பள்ளி திறந்த பின்னரும் அவர்கள் பள்ளிக்கு வருவதில் அக்கறை செலுத்தவில்லை. இதை தவிர்க்கவே பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான சர்வே பணியை ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம் துவக்கினர். ஆக.,ல் துவங்கி செப்டம்பரில் இந்த சர்வே பணி முடிவடைந்தது.சர்வேயில் ஆசிரியர் பயிற்றுநர்கள்மாவட்ட அளவில் 12 ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் சர்வே செய்துள்ளனர். சர்வே படி மாவட்ட அளவில் 9 ஆயிரத்து 563 பேர் பள்ளிக்கு செல்லாமல் இடை நின்றது தெரிந்தது. அவர்களில் 9,078 பேரை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்தனர். மாவட்ட அளவில் நடத்திய சர்வேயில் சாக்கோட்டையில் அதிகபட்சமாக 3,031, தேவகோட்டையில் 1,068 பேர் பள்ளி செல்லாமல் இடைநின்றது தெரிந்தது.இறுதியாக உள்ள 485 பேர்களில் 6 முதல் 14 வயதிற்குள் 49, 15 முதல் 18 க்குள் 336 பேர் என 485 சிறுவர்கள் இருந்தனர்.

அதில் 78 பேர் வீட்டு பயிற்சி, 112 பேர் வெளிமாவட்டம் சென்றவர்கள், 69 பேர் தனி தேர்வர்களாக உள்ளனர். 56 பேர் தனியார் தொழிற்கல்வியில் சேர்ந்துள்ளனர். இன்னும் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய 170 பேரை பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.சர்வே பணியில் சுணக்கம்மாவட்ட அளவில் தற்போது செங்கல் சூளை, கரிமூட்ட தொழில், கிரஷர் தொழில்களில் குடும்பத்துடன் சிறுவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சர்வேயில் ஈடுபட்ட ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பு ஆசிரியர்கள் நேரடியாக களத்திற்கு சென்று சர்வே பணியில் ஈடுபடாமல் தோராயமாக ஒன்றிய வாரியாக பள்ளி செல்லா குழந்தைகள் பட்டியலை தயாரித்து அரசுக்கு வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது போன்ற தொழில் நிறுவனங்களில் நேரடி ஆய்வு செய்தால் இன்னும் நுாற்றுக்கணக்கான பள்ளி இடைநின்ற சிறுவர்களை மீட்கலாம்.முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது, சர்வே பணியின் மூலம் பள்ளி செல்லா குழந்தைகளை அதிகம் கண்டறிந்து பள்ளியில் சேர்த்துள்ளோம். கலெக்டர் ஆய்வு கூட்டத்தில் இப்பணியை பாராட்டியுள்ளார். இருப்பினும் செங்கல் சூளை, கரிமூட்ட தொழில், கிரஷர் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யாதது குறித்து விசாரிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X