வசதிகள் எட்டாக்கனியாகும் எஸ்.மாம்பட்டி ஊராட்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வசதிகள் எட்டாக்கனியாகும் எஸ்.மாம்பட்டி ஊராட்சி

Added : நவ 23, 2021
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.மாம்பட்டி ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் எட்டாக்கனியாகி வருகிறது.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் 14 உட்கடை கிராமங்கள் உள்ளன. இவற்றில் பல கிராமங்களில் மக்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை. எஸ்.மாம்பட்டியில் மகளிருக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.மாம்பட்டி ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் எட்டாக்கனியாகி வருகிறது.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் 14 உட்கடை கிராமங்கள் உள்ளன.

இவற்றில் பல கிராமங்களில் மக்களுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை. எஸ்.மாம்பட்டியில் மகளிருக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.ஒப்பிலான்பட்டியில் 1974 ல் கட்டப்பட்ட மணிமுத்தாறு பாலம் பழுதாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் மக்கள் அதன் வழியாகவே பயணித்து வருகின்றனர்.

கீழ்வாணி கால்வாயில் 2 இடங்களில் பாலம் பழுதடைந்துள்ளது. இங்குள்ள பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் படித்து வருகின்றனர். அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். கரடு முரடான சாலைதிருப்பதிபட்டி செல்லும் சாலை 15 ஆண்டுகளாக கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது.

இப்பகுதிக்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வந்தது இல்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.கிலுகிலுப்பை கிராமத்தின் நடுவே ரோட்டில் கழிவுநீரும் சகதியும் ஓடுகிறது. அதில் நடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அங்குள்ள குடிநீர் தொட்டியில் மோட்டாரை கழற்றிச் சென்ற அதிகாரிகள் இதுவரை பொருத்த வில்லை. தாழ்வாக செல்லும் கம்பிஊராட்சியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் பழுதாகி கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. அவற்றை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சந்திரபட்டியில் மயானத்திற்கு செல்லும் சாலை மாறன் கண்மாய்க்குள் செல்வதால் மழைக்காலங்களில் 6 அடி வரை தண்ணீர் தேங்குகிறது.

இதனால் ஒரு கி.மீ., சுற்றி இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்கின்றனர். கண்மாய்க்குள் பாலம் அமைத்துத் தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாது இளங்குமார், ஒன்றிய கவுன்சிலர்: சந்திரபட்டியில் கணக்கன்குளம் ஊரணிக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் குடிநீர் எடுக்க முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர். அங்கு மெட்டல் சாலை அமைக்க வேண்டும்.

இந்திரா நகர் தெற்கு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். இப்பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளது, வனத்துறை அதிகாரிகள் மூலம் குரங்கை பிடித்து மலைப்பகுதியில் விட வேண்டும். ஒப்பிலான்பட்டி ஸ்ரீதேவி ஊரணிக்கு தடுப்புச்சுவர் கட்டவேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X