பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமி சிகிச்சைக்கு கிடைத்தது இன்சூரன்ஸ்

Added : நவ 23, 2021
Share
Advertisement
பெரம்பலுார் : -புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் சிகிச்சைக்கான தொகையை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் அனுமதி வழங்கியதுடன், முதல் தவணையும் வழங்கப்பட்டது.பெரம்பலுார் மாவட்டம், குரும்பாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஜோசப் ராபர்ட். இவரது மகள் நட்சத்திரா, 16; பிளஸ் 1 படிக்கிறார். இவர், முதுகு தண்டுவடத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வேலுார்

பெரம்பலுார் : -புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் சிகிச்சைக்கான தொகையை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் அனுமதி வழங்கியதுடன், முதல் தவணையும் வழங்கப்பட்டது.

பெரம்பலுார் மாவட்டம், குரும்பாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஜோசப் ராபர்ட். இவரது மகள் நட்சத்திரா, 16; பிளஸ் 1 படிக்கிறார். இவர், முதுகு தண்டுவடத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகிறார். தந்தை அரசு ஊழியராக இருப்பதால் இவருக்கு, அரசு ஊழியர் குடும்ப உறுப்பினருக்கான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், -என்.எச்.ஐ.எஸ்., காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கான நிதி பெறுவதற்கு விண்ணப்பித்தார்.

ஆனால், 'வேலுார் சி.எம்.சி., மருத்துவ மனை நிர்வாகம் அதற்கான அங்கீகாரம் பெறவில்லை' என, இன்சூரன்ஸ் நிறுவனம் சிகிச்சைக்கான பணம் வழங்காமல் தட்டிக் கழித்து வந்தது. 'இப்பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும்' என, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, முதல்வர் தனிப் பிரிவில் இருந்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, நேற்று வேலுார் மாவட்ட கருவூல அலுவலர் விமலா விசாரித்து, கருவூல துறை ஆணையருக்கு அறிக்கை அனுப்பினார். கருவூல துறை ஆணையர் உத்தரவு படி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், சிறுமி நட்சத்திராவின் சிகிச்சைக்கான முழு தொகையையும் வழங்க அனுமதி அளித்ததுடன், முதல் தவணை தொகையையும் நேற்று வழங்கியது. மருத்துவ சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க உதவிய 'தினமலர்' நாளிதழுக்கு, சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X