கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழில் அரசு திட்டங்கள் கோரிய வழக்கு தள்ளுபடி

Added : நவ 23, 2021
Share
Advertisement
மதுரை : -தமிழில் அரசு திட்டங்களை அறிவிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மத்திய அரசின் திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டுகின்றனர். அதை தமிழகத்தில் அமல்படுத்தும்போது அப்படியே தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது. மத்திய அரசு துறைகளின் திட்டங்களை, மக்கள்

மதுரை : -தமிழில் அரசு திட்டங்களை அறிவிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மத்திய அரசின் திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டுகின்றனர். அதை தமிழகத்தில் அமல்படுத்தும்போது அப்படியே தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது. மத்திய அரசு துறைகளின் திட்டங்களை, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தமிழில் மொழி பெயர்த்து அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வாபஸ் பெற்றதால், நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X