பச்சிளம் குழந்தையை விற்ற பெண் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
பல்லாரி-இருபது ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதியிடம், 20 ஆயிரம் ரூபாய் பெற்று, பச்சிளம் குழந்தையை விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.பல்லாரி கம்ப்ளி ராம்சாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மவுலம்மா - ராமான்ஜினி தம்பதியர். திருமணமாகி, 20 ஆண்டாகியும் குழந்தை பேறு இல்லை.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், பெண் குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி போட, அங்கன்வாடி மையத்துக்கு தம்பதி

பல்லாரி-இருபது ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதியிடம், 20 ஆயிரம் ரூபாய் பெற்று, பச்சிளம் குழந்தையை விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.பல்லாரி கம்ப்ளி ராம்சாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மவுலம்மா - ராமான்ஜினி தம்பதியர். திருமணமாகி, 20 ஆண்டாகியும் குழந்தை பேறு இல்லை.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், பெண் குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி போட, அங்கன்வாடி மையத்துக்கு தம்பதி சென்றனர்.அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர்கள், உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சென்னபசப்பா பாட்டீலுக்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்த அவர், தம்பதியிடம் விசாரித்தார். அப்போது தான் குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது.இது குறித்து காம்ப்ளி போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், மணியம்மா என்ற பெண், ஓராண்டுக்கு முன் ராம்சாகர் கிராமத்துக்கு குடிபெயர்ந்தார்.மவுலம்மா - ராமான்ஜினி தம்பதியருக்கு குழந்தை இல்லாததை அறிந்த அவர், குழந்தைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அவர்களும் 20 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டனர்.இதையடுத்து, செப்டம்பர் 1ல், இத்தம்பதியிடம், மணியம்மா 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அன்றைய தினமே, சித்ரதுர்கா ஹிரியூரில் அரசு மருத்துவமனை அருகில், பச்சிளம் பெண் குழந்தையை ஒப்படைத்தார். அன்று முதல் தங்கள் குழந்தையாகவே வளர்த்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தை, பல்லாரி அரசு மாடல் பெண்கள் பாலமந்திரா வளாகத்திலுள்ள அமுல்யா சிசு மந்திரில் ஒப்படைக்கப்பட்டது.மருத்துவமனையிலிருந்து குழ்நதையை திருடி விற்ற மணியம்மா, தம்பதியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X