பொது செய்தி

இந்தியா

மரங்களால் பள்ளிக்கு வருமானம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
தட்சிண கன்னடா-பண்ட்வால் தாலுகாவில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் மரங்களின் மூலம் பள்ளிக்கான வருவாய் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் கிராமத்தின் அரசு உயர்துவக்கப்பள்ளி ஆசிரியர் பாஸ்கர். இவரின் முயற்சியால், பள்ளி வளாகத்தில் ஒரு வகையான பனை மரம் மற்றும் பல்வேறு பழவகை மரங்களை நான்காண்டுகளுக்கு முன் நட்டனர்.இந்த மரங்கள் மூலம்,

தட்சிண கன்னடா-பண்ட்வால் தாலுகாவில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளியில் மரங்களின் மூலம் பள்ளிக்கான வருவாய் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் கிராமத்தின் அரசு உயர்துவக்கப்பள்ளி ஆசிரியர் பாஸ்கர். இவரின் முயற்சியால், பள்ளி வளாகத்தில் ஒரு வகையான பனை மரம் மற்றும் பல்வேறு பழவகை மரங்களை நான்காண்டுகளுக்கு முன் நட்டனர்.இந்த மரங்கள் மூலம், பள்ளிக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வருவாய் கிடைக்கிறது.ஆசிரியர் பாஸ்கர் கூறியதாவது:நான்காண்டுகளுக்கு முன்பு, பள்ளி மாணவர்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக. பள்ளி வளாகத்தில், 1 ஏக்கர் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன.அப்போதிருந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் தான் மரக்கன்றுகளை நட்டனர். 150க்கும் அதிகமான பழவகை மரங்களிலிருந்து பழம் காய்க்கதுவங்கியுள்ளது.இதன் மூலம், பள்ளிக்கு வருவாய் பெற முடிகிறது. பள்ளியின் சுற்றுசூழலும் பசுமையாக மாறியுள்ளது. இப்பள்ளிக்கு ஐந்து முறை பசுமைப்பள்ளி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.காய்கறி தோட்டமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த காய்கறிகள், மாணவர்களின் சத்துணவுக்கு பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X