சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலுார் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 16 வீடுகள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
வேலுார் : வேலுார் அருகே, பாலாற்று வெள்ளத்தில் 16 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.தமிழக - ஆந்திர மாநில எல்லையில் பெய்த கன மழையால், பாலாற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோரம் வீடுகள் கட்டி வசிப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். கடந்த 19ல் பசுமாத்துார் பாலாற்றங்கரை ஓரம் உள்ள பாலாற்று நகரில் வக்கீல் இளங்கோ வீடு அடித்து செல்லப்பட்டது.அதேபோல, வேலுார் அருகே
 வேலுார் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 16 வீடுகள்

வேலுார் : வேலுார் அருகே, பாலாற்று வெள்ளத்தில் 16 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

தமிழக - ஆந்திர மாநில எல்லையில் பெய்த கன மழையால், பாலாற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோரம் வீடுகள் கட்டி வசிப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். கடந்த 19ல் பசுமாத்துார் பாலாற்றங்கரை ஓரம் உள்ள பாலாற்று நகரில் வக்கீல் இளங்கோ வீடு அடித்து செல்லப்பட்டது.அதேபோல, வேலுார் அருகே வடுகந்தாங்கல் அடுத்த வட விரிஞ்சிபுரம் காமராஜர் நகரில் ஆற்றங்கரையோரம், 64 பேர் வீடுகள் கட்டி வசித்தனர்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அங்கிருந்த, 16 வீடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த மக்கள் வெளியேறி தப்பினர். ஆற்றின் நடுவில் கட்டியிருந்த பூததேவன் கோவில் மூழ்கியது. மண் அரிப்பால், எட்டு வீடுகள் இடிந்த நிலையில், 12 வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.

அப்பகுதியில் மற்ற வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற மறுக்கின்றனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், காட்பாடி விருதம்பட்டு பாலாற்றில் இரண்டு பெண் சடலங்கள் கரை ஒதுங்கின. அவர்கள் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலுார் மாவட்ட வருவாய் துறையினர் கூறியதாவது:கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழையால், 15 பேர் பலியான நிலையில், ஒன்பது பசு மாடுகள், 15 ஆயிரம் கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 20 தரைப்பாலங்கள் மூழ்கின. 528 வீடுகள் இடிந்த நிலையில், 54 முகாம்களில், 5,801 பேர் தங்கியுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X