வீட்டில் புகுந்து மகள்கள் முன்வே தந்தை வெட்டி கொலை

Added : நவ 23, 2021
Share
Advertisement
எலஹங்கா நியூ டவுன்,-வீட்டிக்குள் புகுந்த நான்கு பேர் கும்பல், மகள்கள் கண் முன்னே, தந்தையை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியோடியது.பெங்களூரு எலஹங்கா நியூ டவுனில் வசித்து வந்தவர் தீபக் குமார் சிங், 46. இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.ஜி.கே.வி.கே., எனும் காந்தி விவசாய பல்கலை வளாகத்தில் செக்யூரிட்டியாக, தீபக் குமார் சிங் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு

எலஹங்கா நியூ டவுன்,-வீட்டிக்குள் புகுந்த நான்கு பேர் கும்பல், மகள்கள் கண் முன்னே, தந்தையை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியோடியது.பெங்களூரு எலஹங்கா நியூ டவுனில் வசித்து வந்தவர் தீபக் குமார் சிங், 46. இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.ஜி.கே.வி.கே., எனும் காந்தி விவசாய பல்கலை வளாகத்தில் செக்யூரிட்டியாக, தீபக் குமார் சிங் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன், இவரது மனைவி பீஹார் சென்றிருந்தார்.இந்நிலையில், நேற்று காலை இவரது வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேர், மகள்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்களின் கண் முன்னே, தந்தையை வெட்டி கொன்று விட்டு தப்பியோடினர்.கொலையாளிகள் ஓடிய பின், மகள்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் எலஹங்கா நியு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த பயங்கர கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை; போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X