சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை கொலை; மகன் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை : தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாறைச் சேர்ந்தவர் பாலு, 65; விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, நான்கு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். பாலு தினந்தோறும் மது அருந்தி, தெருவில் உள்ள மக்களிடமும், குடும்பத்தினரிடமும் தகராறு செய்வது வழக்கம். சென்னையில் பணியாற்றி வந்த மகன் காளிமுத்து, 28, கடந்த

மயிலாடுதுறை : தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாறைச் சேர்ந்தவர் பாலு, 65; விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, நான்கு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். பாலு தினந்தோறும் மது அருந்தி, தெருவில் உள்ள மக்களிடமும், குடும்பத்தினரிடமும் தகராறு செய்வது வழக்கம். சென்னையில் பணியாற்றி வந்த மகன் காளிமுத்து, 28, கடந்த 16ம் தேதி ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் பாலு குடித்து வந்து தகராறு செய்த நிலையில், சற்று நேரத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகாரில், மகன் காளிமுத்துவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பாலு குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்து மூங்கில் கட்டையால் தலையில் அடித்ததில் உயிரிழந்தது தெரிந்தது. காளிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X