லாரி மனி லாரி மோதல்; தீப்பிடித்ததால் இரு ஓட்டுனர்களும் பலி

Added : நவ 23, 2021
Share
Advertisement
பீதர்-பீதரில், அதிவேகமாக ஓட்டியதால் லாரியும், மினி லாரியும் மோதி கொண்டன. இதில், இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து, இரண்டு ஓட்டுனர்களும் தீயில் கருதி இறந்தனர்.பெலகாவியின் சிக்கோடியிலிருந்து சர்க்கரை மூடைகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று, நேற்று முன்தினம் இரவு, தெலுங்கானாவின் ஐதராபாத் நகருக்கு புறப்பட்டது.இதே வேளையில் கலபுரகியின் நந்துார் பகுதியிலிருந்து மது

பீதர்-பீதரில், அதிவேகமாக ஓட்டியதால் லாரியும், மினி லாரியும் மோதி கொண்டன. இதில், இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து, இரண்டு ஓட்டுனர்களும் தீயில் கருதி இறந்தனர்.பெலகாவியின் சிக்கோடியிலிருந்து சர்க்கரை மூடைகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று, நேற்று முன்தினம் இரவு, தெலுங்கானாவின் ஐதராபாத் நகருக்கு புறப்பட்டது.இதே வேளையில் கலபுரகியின் நந்துார் பகுதியிலிருந்து மது பாட்டில்கள் ஏற்றி கொண்டு கொப்பாலை நோக்கி மினி லாரி ஒன்று புறப்பட்டது.பீதர் மாவட்டம், சஹபாத் தாலுகா, தோனசனஹள்ளி கிராமம் அருகே வந்த போது இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன.மோதிய வேகத்தில் பெட்ரோல் கசிந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த வேளையில் சேதமடைந்த லாரிகளிலிருந்து இரண்டு ஓட்டுனர்களும் வெளியே வர முடியவில்லை.தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டு கொண்டே இருந்தனர். தீப்பிடித்து எரிந்ததால் அவர்களை காப்பாற்ற யாராலும் முடியவில்லை.இருவரும் உயிருடன் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். லாரியின் ஓட்டுனர் சிந்தகியை சேர்ந்த ஈரண்ணா, 45, என்றும், மினி லாரியின் ஓட்டுனர் சஹபாத்தை சேர்ந்த காஜா, 38, என்றும் தெரிய வந்துள்ளது.தகவலறிந்த போலீசார், தீயணைப்பு துறையினர் வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X