ஹம்பி புரந்தர மண்டபம் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ளது. | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஹம்பி புரந்தர மண்டபம் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ளது.

Added : நவ 23, 2021
Share
விஜயநகர்-பிரசித்தி பெற்ற ஹம்பி புரந்தர மண்டபம் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ளது. ஓராண்டில் இந்த மண்டபம் நீரில் மூழ்குவது, 11வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.விஜயநகர் ஹொஸ்பேட்டின், ஹம்பி உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள துங்கபத்ரா ஆற்றங்கரையின் புரந்தர மண்டபம், 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.கம்பங்கள் உறுதியாக உள்ளது. சில ஆண்டுகளாக மழையின்

விஜயநகர்-பிரசித்தி பெற்ற ஹம்பி புரந்தர மண்டபம் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ளது. ஓராண்டில் இந்த மண்டபம் நீரில் மூழ்குவது, 11வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.விஜயநகர் ஹொஸ்பேட்டின், ஹம்பி உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள துங்கபத்ரா ஆற்றங்கரையின் புரந்தர மண்டபம், 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.கம்பங்கள் உறுதியாக உள்ளது. சில ஆண்டுகளாக மழையின் அளவு அதிகரிப்பதால், மண்டபம் வெள்ளத்தில் மூழ்குகிறது. ஹம்பியில் பல நினைவு மண்டபங்கள் இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலா பயணியர், புரந்தர மண்டபத்தில் போட்டோ எடுத்து கொள்ளாமல் சென்றதில்லை. சில வாரங்களாக தொடர் மழையால், மண்டபம் நீரில் மூழ்கியுள்ளது.மண்டபத்தை காண வரும் சுற்றுலா பயணியர். ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ஓரே ஆண்டில் இம்மண்டபம் நீரில் மூழ்குவது, இது 11வது முறை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X