பொது செய்தி

இந்தியா

செக் போஸ்ட்

Added : நவ 23, 2021
Share
Advertisement
அடங்காதவர், ஆபத்தானவர்!கை கட்சியின், 'மாஜி' செங்கோட்டைக்காரர் தொடர்ச்சியா ஏழு முறை டெல்லியில் வாசம் செய்தவரை மீறி கோலார் எம்.எல்.சி, சீட் வந்திடக்கூடாது என்பதற்காக அவரின் 'பவர்' என்னவென காட்ட டெல்லியில் தங்கினார்.இவரோட எம்.பி., பதவி பறிப்போக காரணமானவர்களின் ஒருங்கிணைந்த ஆதரவாளருக்கு எம்.எல்.சி., தேர்தலுக்கு சீட் கிடைக்காமல் ஆக்க வேண்டும். இதற்காக அவர் எல்லா

அடங்காதவர், ஆபத்தானவர்!கை கட்சியின், 'மாஜி' செங்கோட்டைக்காரர் தொடர்ச்சியா ஏழு முறை டெல்லியில் வாசம் செய்தவரை மீறி கோலார் எம்.எல்.சி, சீட் வந்திடக்கூடாது என்பதற்காக அவரின் 'பவர்' என்னவென காட்ட டெல்லியில் தங்கினார்.இவரோட எம்.பி., பதவி பறிப்போக காரணமானவர்களின் ஒருங்கிணைந்த ஆதரவாளருக்கு எம்.எல்.சி., தேர்தலுக்கு சீட் கிடைக்காமல் ஆக்க வேண்டும். இதற்காக அவர் எல்லா லெவலுக்கும் போக தயாராயிட்டாரு.மனு தாக்கல் 23 கடைசி தினமாக இருப்பதால், 22 மதியம் வரை வேட்பாளர் அறிவிக்க விடாமல், தத்தளிக்க செய்து அறிவிக்க முடியாமல் ஆட்டம் காட்ட செய்தார்.சும்மா எளிதாக ஜெயிக்க வேண்டிய 'சீட்' தடம்புரள போகுதுன்னு கை காரர்களை அதிர வைத்திருக்கு.வங்கி சேர்மனுக்கு சீட் கிடைக்க விடாமல் தடுத்து எம்.எஸ்.ஐ.எல்., மாஜி சேர்மனுக்கு சீட் தரணும்னு ஒத்தை காலில் தவம் இருக்குமான்னு டெல்லி தகவல் சொல்லுது.மாஜி முனி ஆபத்தானவர்னு இப்பவும் பேசிக்கிறாங்க. முல்பாகல் சட்டசபைத் தொகுதி மீது இலக்கு வைத்து எம்.எல்.சி., தேர்தலுக்கு கால் பதித்திருக்கிறார்!பூ கட்சியின் 'பி' டீம், 'சி' டீம்!கோளாறு தொகுதியா மாறிபோன கோலாரில் எம்.எல்.சி., தேர்தலில் பூ காரங்க மாவட்ட தலைவரான டாக்டரை வேட்பாளராக அறிவிச்சாங்க.கை காரர்கள் வேட்பாளர் யாரென முடிவெடுக்க முடியாமல் டெல்லி பொறுப்பில் தள்ளி விட்டுடாங்க.புல்லுக்கட்டுக்காரர்களை பூ கார்களின் 'பி' டீம்னு கை காரங்க சொல்றாங்க. இதுக்கு மாஜி புல்லுக்கட்டு சி.எம்., கடுப்பாகிட்டார்.கோலார் தொகுதியை பூக்காரர்களுக்கு புல்லுக்கட்டு கட்சி விட்டு தருவதாக பேசுவதை அறிந்த அவர், எனது கவனத்துக்கு வரவே இல்லன்னு கோலாரில் கூறியதோடு, நாங்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது புரிஞ்சிக்குவாங்க.கை கட்சி தான், பூ கட்சியின் 'சி' டீம் போல இப்போ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எது உண்மையென எம்.எல்.சி., தேர்தலிலேயே தெரிஞ்சி விடும்னு, மாஜி சி.எம்., நக்கலா சிரிச்சு விளக்கினாரு!அசம்பிளி ஆசை என்னாவது?கோல்டன் சிட்டி தொகுதியில் 160 கிராமங்கள் இருக்குது. அந்த கிராமங்கள் பக்கம் நகர அரசியல் தலைவர்கள் அன்னாந்து கூட பார்த்ததில்லையாம்.அதனால், அசம்பிளி தேர்தல் நேரத்தில், கிராமத்துகாரர்களும் கூட சிட்டிக்கார தலைவர்களை அந்நியராகவே பாக்குறாங்களாம்.தொடர் மழையால், கிராம குடிசைகள், விளைபொருட்கள் பாழாய் போனதை, சிட்டியோட அரசியல் தலைவர்கள் இதுவரை போய் பார்த்து, குறை கேட்கலையேன்னு பல விலேஜ் காரர்கள் கசப்பா பேசுறாங்க.இவர்களோடு பேச்சில் வெளியூர் காரர்களுக்கு தான் மதிப்பு கூட்டுறாங்கன்னு தெரியிது.பழையபடி கோல்டு சிட்டிக்கென தனியா ஒரு தொகுதி அமைந்தால் தான் உள்ளூரு காரர்கள் அசம்பிளிகாரரா ஆகமுடியும். இல்லையென்றால் கோல்டு சிட்டிக்கார தலைவர்கள், ச.ம.உ., ஆசையை புதைத்துக்கொள்ளணும்.அடுத்து தொகுதி மறு வரையறை அமைக்கும் போதாவது கும்ப கர்ண தூக்கத்தில் இல்லாமல் விழிப்பாக இருக்க வேணும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X